குழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழை1குழை2குழை3குழை4

குழை1

வினைச்சொல்குழைய, குழைந்து, குழைக்க, குழைத்து

 • 1

  (அரிசி முதலியவை அதிகமாக வெந்துவிடுவதால்) குழகுழப்புத் தன்மை ஏற்படுதல்.

  ‘சாதம் குழைந்து களி மாதிரி ஆகிவிட்டது’

 • 2

  (உறுதியாக இருக்க வேண்டிய உடல், கால் முதலியன) தளர்தல்; துவளுதல்.

  ‘மயக்கத்தால் உடல் குழைந்து தலை சரிந்தது’
  ‘பயத்தில் கால்கள் குழைந்து துணிபோல் துவண்டன’

 • 3

  (ஒரு காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக ஒருவரிடம்) அளவுக்கு மீறி நயமாக நடந்துகொள்ளுதல்.

  ‘காரியம் ஆக வேண்டும் என்றால் அவன் நாய்போல் குழைவான்’

 • 4

  உயர் வழக்கு (ஒன்றோடு இனிமையாக) இணைதல்; கலத்தல்.

  ‘காற்றில் குழைந்து வந்தது கீதம்’

குழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழை1குழை2குழை3குழை4

குழை2

வினைச்சொல்குழைய, குழைந்து, குழைக்க, குழைத்து

 • 1

  (சந்தனம், சுண்ணாம்பு, பொடி முதலிய திடப் பொருளை) திரவத்தில் சாந்துபோலக் கலத்தல்.

  ‘மருந்துப் பொடியைத் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவு!’
  ‘விபூதியைக் குழைத்து நெற்றியில் இட்டுக்கொண்டார்’

குழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழை1குழை2குழை3குழை4

குழை3

வினைச்சொல்குழைய, குழைந்து, குழைக்க, குழைத்து

 • 1

  (வாலை) ஆட்டுதல்.

குழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குழை1குழை2குழை3குழை4

குழை4

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு தழை.

  ‘ஆட்டுக்குக் குழை ஒடித்துப் போடு!’