குவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குவி1குவி2குவி3

குவி1

வினைச்சொல்குவிய, குவிந்து, குவிக்க, குவித்து

 • 1

  (ஒரு பொருள் அல்லது மனிதர்கள் ஒரு இடத்தில்) அதிக அளவில் சேர்தல்.

  ‘அரிசி மூட்டைமூட்டையாக வந்து குவிந்தது’
  ‘காய்கறிகள் குவிந்துகிடந்தன’
  ‘திரையரங்கின் முன் தங்கள் அபிமான நடிகரைப் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர்’
  உரு வழக்கு ‘ஒரு நிறுவனத்தில் ஒருவரிடமே எல்லா அதிகாரங்களையும் குவியவிடக் கூடாது’
  உரு வழக்கு ‘விடுமுறை கழிந்து வந்து பார்த்தால் வேலை குவிந்திருக்கிறது’

 • 2

  (ஏதேனும் ஒரு செயலுக்காகக் கை, உதடு முதலியன) இணைந்து சேர்தல் அல்லது கூடுதல்; (மலர்கள்) கூம்புதல்.

  ‘‘உ’ என்பதை உச்சரிக்கும்போது உதடுகள் குவியும்’
  ‘மொட்டு குவிந்து நீண்டிருந்தது’

 • 3

  (ஒருவரின் பார்வை, கவனம் முதலியவை ஒன்றின் மீது) நிலைத்தல்; பதிதல்.

  ‘அவன் பார்வை அந்தக் கடையில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மீது குவிந்தது’

 • 4

  இயற்பியல்
  ஒளிக் கதிர்கள் ஓர் ஆடியின் மறுபுறத்தில் அல்லது எதிர்ப்புறத்தில் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைதல்.

குவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குவி1குவி2குவி3

குவி2

வினைச்சொல்குவிய, குவிந்து, குவிக்க, குவித்து

 • 1

  (பொருளை, மனிதர்களை) அதிக அளவில் சேர்த்தல்; நிறைத்தல்.

  ‘எல்லைப் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது’
  உரு வழக்கு ‘இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது’

 • 2

  (பொருள்களை ஒன்றாகப் போட்டு) குவியலாக ஆக்குதல்.

  ‘துணிகளைக் குவித்துப்போட்டு விற்பனை செய்தார்கள்’
  ‘சாலை போடக் கற்களைக் குவித்திருக்கிறார்கள்’

 • 3

  (கைகளை) கூப்புதல்; (ஒலியை உச்சரிக்க உதடுகளை) சுழித்து ஒன்றாக்குதல்.

  ‘ஆசிரியர் வந்ததும் கைகுவித்து வணக்கம் தெரிவித்தார்’
  ‘‘உ’ என்பதை உச்சரிக்க உதடுகளைக் குவிக்க வேண்டும்’

 • 4

  இயற்பியல்
  ஒளிக்கதிர்களை ஓர் ஆடியின் மூலம் மறுபுறத்தில் அல்லது எதிர்ப்புறத்தில் ஒரு புள்ளியின் மேல் விழச் செய்தல்.

  ‘சூரிய ஒளியைக் குழியாடியின் மூலம் காகிதத்தின் மேல் குவித்தால் காகிதம் தீப் பிடித்து எரியும்’

குவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குவி1குவி2குவி3

குவி3

துணை வினைகுவிய, குவிந்து, குவிக்க, குவித்து

 • 1

  முதன்மை வினையின் தொழிலை மிகுதிப்படுத்திக் காட்டும் துணை வினை.

  ‘அவர் சிறுகதைகளையும் நவீனங்களையும் எழுதிக்குவித்தார்’
  ‘உலகப்போர் மக்களைக் கொன்றுகுவித்தது’