தமிழ் கூக்குரல் யின் அர்த்தம்

கூக்குரல்

பெயர்ச்சொல்

 • 1

  (பிறர் கேட்பதற்காக ஒருவர் அல்லது பலர் எழுப்பும்) உரத்த சத்தம்; கூச்சல்.

  ‘ஒரு பெண்ணின் கூக்குரல் கேட்டுக் குரல் வந்த திசை நோக்கி ஓடினோம்’

 • 2

  எதிர்ப்பு, முறையீடு, கண்டனம் போன்றவற்றை வெளிப்படுத்துவது.

  ‘பத்திரிகைச் சுதந்திரம் தடைசெய்யப்படுகிறது என்ற கூக்குரல் எங்கும் கேட்கத் தொடங்கிவிட்டது’
  ‘மக்களின் கூக்குரலுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் செவிசாய்க்க வேண்டும்’