தமிழ் கூச்சம் யின் அர்த்தம்

கூச்சம்

பெயர்ச்சொல்

 • 1

  (இயல்புக்கு மாறான ஒன்றால் ஒருவருக்கு ஏற்படும்) தயக்க உணர்வு; வெட்கம்.

  ‘எல்லோரும் தன்னையே பார்ப்பது தெரிந்ததும் அவளுக்குக் கூச்சமாக இருந்தது’
  ‘மேடையில் பேச இவ்வளவு கூச்சமா?’

 • 2

  (உடலில் சில இடங்களைத் தொடும்போது எழும்) ஒவ்வாத கிளர்ச்சி உணர்வு.

  ‘இடுப்பைத் தொடாதே; கூச்சமாக இருக்கிறது’