தமிழ் கூச்சல் யின் அர்த்தம்

கூச்சல்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரே நேரத்தில் பலர் பேசுவதால் ஏற்படும்) தெளிவற்ற உரத்த சத்தம்.

  ‘‘ஏன் கூச்சல் போடுகிறீர்கள்?’ என்று அம்மா குழந்தைகளைப் பார்த்துக் கத்தினாள்’
  ‘குழாயடியில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது’

 • 2

  (ஒருவர் அல்லது பலர் எழுப்பும்) உரத்த குரல் ஒலி.

  ‘பக்கத்து வீட்டுக்காரன் போட்ட கூச்சலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை விழித்துக்கொண்டது’
  ‘‘தலைவரை விடுதலை செய்’ என்று கூட்டத்தினர் கூச்சல் போடத் துவங்கினார்கள்’