தமிழ் கூசு யின் அர்த்தம்

கூசு

வினைச்சொல்கூச, கூசி

 • 1

  (உடல் உறுப்புகளைக் குறிக்கும் சொற்களோடு இணைந்து வரும்போது) மனத்தில் ஒவ்வாத உணர்வு ஏற்படுதல்.

  ‘கெட்ட வார்த்தைகளால் திட்ட வாய் கூசவில்லையா?’
  ‘லஞ்சம் வாங்குவதற்குக் கை கூசாதா?’
  ‘தெரு முழுவதும் அசிங்கம்; நடக்கக் கால் கூசுகிறது’

 • 2

  (அதிக ஒளியால் கண்) பார்க்க முடியாமல் சுருங்குதல்.

  ‘கண் கூசும் மின் விளக்கு அலங்காரம்’

 • 3

  (புளிப்போ குளிர்ச்சியோ படுவதால் பல்லில்) ஒவ்வாத உணர்வு ஏற்படுதல்.

  ‘மாங்காய் ஒரே புளிப்பு; பல் கூசுகிறது’