கூட -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கூட1கூட2

கூட1

வினையடை

 • 1

  (குறிப்பிடப்படுவதோடு) இன்னும் கூடுதலாக; மேலும்.

  ‘இரண்டு நாள் அரசு விடுமுறை. கூட ஒரு நாள் விடுமுறை எடுத்தால் ஊருக்குப் போகலாம்’
  ‘ஐநூறு ரூபாய்க்கு இந்த நூல்புடவை வாங்குவதை விடக் கூட இருநூறு ரூபாய் போட்டுப் பட்டுப் புடவை வாங்கிவிடலாம்’
  ‘நேரம் கொஞ்சம் கூட ஆகிவிட்டது’
  ‘பணம் கூடக் கொடுத்தேன்’

கூட -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கூட1கூட2

கூட2

இடைச்சொல்

 • 1

  ஏற்கனவே உணர்த்தப்பட்டதோடு தற்போது குறிப்பிடப்படுவதும் ஒத்திருக்கிறது என்பதைக் கூறப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘திருமணத்திற்கு என்னால்கூடப் போக முடியவில்லை’
  ‘எனக்குக்கூட வயதாகிறது’
  ‘இங்கு தங்குவதற்குக்கூட கட்டணம் உண்டு’
  ‘கோவை கூட வெயிலில் தகிக்கிறது’

 • 2

  ஒன்றை வலியுறுத்திக் கூறப் பயன்படும் இடைச்சொல்.

  ‘ஒருவாய்த் தண்ணீர் கூடக் குடிக்கவில்லை’
  ‘இந்த ஓலைச்சுவடிக்குப் பத்தாயிரம் ரூபாய்கூடக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’
  ‘உனக்குக் கொஞ்சம்கூடப் புத்தியில்லை’
  ‘சாகும் தருவாயில்கூட கர்ணன் தர்மம் செய்தான்’