தமிழ் கூட்டம் யின் அர்த்தம்

கூட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  திரண்டிருக்கும் மக்கள் தொகுதி.

  ‘பொங்கலை முன்னிட்டுக் கடைவீதியில் கூட்டம் அலைமோதியது’
  ‘கலவரக்காரர்களின் கூட்டத்தைக் கலைக்கக் காவலர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வெடித்தனர்’
  ‘பயணச்சீட்டு வாங்கும் இடத்தில் கூட்டம் அதிகம் இல்லை’

 • 2

  (ஒரு நோக்கத்திற்காக அழைக்கப்பட்டவர்கள் பங்கேற்பதற்காக) கூடுதல்.

  ‘செயற்குழுக் கூட்டம்’
  ‘அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறும்’

 • 3

  (விலங்கு, பறவை ஆகியவை) குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் உள்ள தொகுதி.

  ‘காட்டில் யானைக் கூட்டம்’
  ‘காக்காய்க் கூட்டம்’

 • 4

  பொதுமக்களை ஒரு இடத்தில் கூடச் செய்து, தலைவர்கள் பேசும் ஏற்பாடு.

  ‘பிரதமர் பேசும் கூட்டத்திற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது’
  ‘இது புதிய கட்சி தொடங்கிய பிறகு நடத்தப்படும் முதல் கூட்டம்’

 • 5

  தீய செயலில் ஈடுபடுபவர்களின் குழு.

  ‘கொள்ளைக் கூட்டம்’
  ‘ரௌடிக் கூட்டம்’