தமிழ் கூட்டல் யின் அர்த்தம்

கூட்டல்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு எண்ணோடு மற்றொரு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் கணித முறை.

  ‘ஆரம்ப வகுப்புகளில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன’

 • 2

  ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கூட்டுவதன் மூலம் பெறும் மொத்த எண்ணிக்கை.

  ‘இந்தக் கூட்டலைக் கொஞ்சம் சரிபார்’
  ‘கூட்டலில் எங்கோ இடிக்கிறது’