தமிழ் கூட்டிக்கொண்டு யின் அர்த்தம்

கூட்டிக்கொண்டு

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (ஒரு இடத்திற்குப் போகும்போதோ வரும்போதோ அல்லது ஒரு செயலைச் செய்யும்போதோ ஒருவரைத் தன்னுடன்) கூட்டாகச் சேர்த்து; அழைத்துக்கொண்டு.

  ‘நண்பர்களைக் கூட்டிக்கொண்டு கொட்டமடிக்கிறான்’
  ‘இவனையும் கூட்டிக்கொண்டு வெயிலில் சுற்றுகிறாயே!’
  ‘கடற்கரைக்குக் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சென்றேன்’
  ‘நாளைக்கு வரும்போது உன் தம்பியையும் கூட்டிக்கொண்டு வா’