தமிழ் கூட்டுறவு யின் அர்த்தம்

கூட்டுறவு

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  ஒன்றுசேர்ந்து செயல்படும் தன்மை அல்லது நிலை.

  ‘உலக நாடுகளிடையே கூட்டுறவை வளர்க்க வேண்டும்’
  ‘நாம் அனைவரும் கூட்டுறவாகச் செயல்பட்டால் இந்தக் காரியத்தைச் சிறப்பாக முடிக்கலாம்’

 • 2

  (பெரும்பாலும் பெயரடையாக) உறுப்பினர்களே உடைமையாளர்களாக இருந்து கூட்டாக நிர்வகிக்கும் நிர்வாக முறை.

  ‘தொழிலாளர் கூட்டுறவு அங்காடி’
  ‘கூட்டுறவுப் பால்பண்ணை’
  ‘கூட்டுறவுச் சர்க்கரை ஆலை’