தமிழ் கூடாரம் யின் அர்த்தம்

கூடாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (தற்காலிகமாகத் தங்குவதற்கு) கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு.

    ‘வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வந்திருக்கும் ராணுவத்தினர் கூடாரம் அடித்துத் தங்கியுள்ளனர்’

  • 2

    (சர்க்கஸ் குழுவினர்) சாகச விளையாட்டுகளைப் பொதுமக்கள் பார்ப்பதற்காக அமைக்கும் அமைப்பு.

    ‘இந்த சர்க்கஸ் கூடாரத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கலாம்’