கூடிய -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கூடிய1கூடிய2

கூடிய1

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு அதிகமான; கூடுதலான.

  ‘கூடிய பாரத்தை அவனால் சுமக்க முடியாது’
  ‘இந்த வண்டி கூடிய பாரத்தை எப்படித் தாங்கும்?’
  ‘அவன் எல்லாப் பாடங்களிலும் கூடிய மதிப்பெண்கள் எடுத்துள்ளான்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நீண்ட.

  ‘இவர் என் கூடிய கால நண்பர்’
  ‘ஊருக்குப் போனவர் கூடிய நாட்கள் அங்கேயே தங்கிவிட்டார்’

கூடிய -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கூடிய1கூடிய2

கூடிய2

இடைச்சொல்

 • 1

  ‘(முன் குறிப்பிடப்படும் ஒன்றுடன்) சேர்ந்து இருக்கும் அல்லது நிகழும்’ என்ற பொருளைத் தருவதற்குப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது’
  ‘விளக்கோடு கூடிய மின்விசிறி’