தமிழ் கூடிவா யின் அர்த்தம்

கூடிவா

வினைச்சொல்-வர, -வந்து

 • 1

  (ஒன்றைச் செய்யக் காலம், நிலைமை போன்றவை) ஒத்துவருதல் அல்லது ஏற்றதாக அமைதல்.

  ‘நேரமும் காலமும் கூடி வந்தால் எல்லாம் நடக்கும்’
  ‘நிலைமைகள் கூடிவந்தால் அடுத்த ஆண்டு புதிய பள்ளிக்கூடத்தைத் தொடங்கிவிடுவேன்’

 • 2

  ஒன்றுதிரண்டு உரிய முறையில் உருவாதல்.

  ‘அந்தக் கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு இன்னும் மொழி கூடிவரவில்லை’