கூடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கூடு1கூடு2கூடு3

கூடு1

வினைச்சொல்கூட, கூடி, கூடிய, கூடியது, கூடும், கூடாது போன்ற வடிவங்களில் மட்டும்

 • 1

  (சேர்தல், இணைதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஓர் இடத்தில்) வந்து சேர்தல்; குழுமுதல்

   ‘நாடகத்தைப் பார்க்க மக்கள் பெரும் திரளாகக் கூடியிருந்தனர்’
   ‘அடுத்த மாதம் உங்கள் வீட்டில் நாம் அனைவரும் கூடிப் பேசுவோம்’

  2. 1.2 (உறுப்பினர்களைக் கொண்ட குழு, அமைப்பு போன்றவை) குறிப்பிட்ட நோக்கத்திற்காக முறையாகச் சந்தித்தல்

   ‘பாராளுமன்றம் நாளை கூடுகிறது’

  3. 1.3 (உடைந்த எலும்பு போன்றவை) ஒன்றுசேர்தல்; பொருந்துதல்

   ‘சின்னப் பையன்தானே, எலும்பு கூடிவிடும்’

  4. 1.4 உடலுறவு கொள்ளுதல்; இணைதல்

   ‘மனைவியோடு அவன் கூடுவது சனிக்கிழமைகளில் மட்டும்தான் என்று ஆகிவிட்டது’

  5. 1.5 ஒன்றுபட்டிருத்தல்

  6. 1.6 (நேரம், பொழுது) வாய்த்தல்

   ‘எதிர்பார்த்திருந்த சுப வேளை கூடிவிட்டது’

 • 2

  (எண்ணிக்கை, அளவு உயர்தல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (பொருள், விலை, வயது முதலியவை) அதிகரித்தல்; அதிகப்படுதல்

   ‘பொருள்களின் விலை கூடுகிறதே தவிரக் குறைவதில்லை’
   ‘நாட்டில் பணவீக்கம் கூடியுள்ளது’
   ‘சாம்பாரில் உப்பு சிறிது கூடினாலும் சாப்பிட முடியாது’

கூடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கூடு1கூடு2கூடு3

கூடு2

துணை வினைகூட, கூடி, கூடிய, கூடியது, கூடும், கூடாது போன்ற வடிவங்களில் மட்டும்

 • 1

  (‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) ‘இயலுதல்’ என்னும் பொருளில் வரும் ஒரு துணை வினை.

  ‘எல்லாரும் வாங்கக் கூடிய விலையில் இது இல்லை’
  ‘இந்தத் தொழில் செல்வந்தர்களால் மட்டுமே தொடங்கப்படக் கூடியது’
  ‘இந்த வர்ணம் கழுவக்கூடியது’
  ‘இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடியது’

 • 2

  (‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் உடன்பாட்டு வடிவங்களில்) ஒன்று நிகழ்ந்திருக்க அல்லது நிகழச் சாத்தியம் இருப்பதைத் தெரிவிக்கும் முறையில் பயன்படுத்தும் துணை வினை.

  ‘அவன் சொல்வது உண்மையாக இருக்கக்கூடும்’
  ‘அவர் லஞ்சம் வாங்கியிருக்கக்கூடும்’
  ‘அவர் விரைவில் சென்னை வரக்கூடும்’

 • 3

  (‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் எதிர்மறை வடிவங்களில்) ஒரு செயலைச் செய்யத் தடை விதிக்கும் முறையில் பயன்படுத்தப்படும் துணை வினை.

  ‘சாப்பிடக் கூடாத உணவு’
  ‘தேர்வு முடியும்வரை நீ விளையாடப் போகக் கூடாது’
  ‘இந்த மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடாது’
  ‘குழந்தைகளிடம் நம் கோபத்தைக் காட்டக் கூடாது’
  ‘வண்டியை அங்கு நிறுத்தக் கூடாது’

கூடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கூடு1கூடு2கூடு3

கூடு3

பெயர்ச்சொல்

 • 1

  (பறவை, தேனீ, பூச்சி முதலியவை) அமைத்துக்கொள்ளும் வசிப்பிடம்.

  ‘பறவைகள் தங்கள் கூட்டிற்குத் திரும்பின’
  ‘குளவிக் கூடு’
  ‘பீடி குடித்துக்குடித்து நெஞ்சு கூடாகப் போய்விட்டது’

 • 2

  (ஒன்றை) வைத்துக்கொள்ள ஏற்ற விதத்தில் அமைக்கப்படும் சாதனம்.

  ‘கண்ணாடிக் கூடு’

 • 3

  (வெயிலிலிருந்து, மழையிலிருந்து பாதுகாக்க) வண்டியில் கூரைபோல் போடப்படும் தடுப்பு.

  ‘வண்டிக்குக் கூடு கட்ட வேண்டும்’

 • 4

  வட்டார வழக்கு (நெல் கொட்டிவைக்கும்) பத்தாயம்.

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு சிறை.

  ‘எங்களைக் கூடுகளில் அடைத்துவைத்து ராணுவம் விசாரித்தது’