தமிழ் கூடுதல் யின் அர்த்தம்

கூடுதல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (குறிப்பிட்ட அளவைவிட) அதிகம்; மிகுதி.

  ‘அடுத்த ஆண்டில் உணவு உற்பத்தி பத்து சதவீதம் கூடுதலாக இருக்கும்’
  ‘அவர் உயரம் சராசரி உயரத்தைவிடக் கூடுதல்’

 • 2

  (பெரும்பாலும் பெயரடையாக) ஏற்கனவே இருப்பதோடு மேலும் சேர்க்கப்படுவது என்ற பொருள் தரும் சொல்.

  ‘திட்டத்திற்குக் கூடுதல் நிதி வழங்கப்படும்’
  ‘தெற்கே போகும் ரயில்களில் கோடை விடுமுறையை முன்னிட்டுக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்’
  ‘கலவரப் பகுதிக்குக் கூடுதல் படைகள் அனுப்பத் தீர்மானம்’

 • 3

  (பெயரடையாக வரும்போது) (அரசு அலுவலகம், பதவி ஆகியவற்றைக் குறிக்கும்போது) (தேவை கருதி) ‘மேலும் ஏற்படுத்தப்பட்டது’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘கூடுதல் நீதிமன்றம்’
  ‘கூடுதல் பொதுச்செயலர்’