தமிழ் கூட்டாளி யின் அர்த்தம்

கூட்டாளி

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும்) தீய செயலில் ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்.

  ‘இந்த வட்டாரத்தில் பிரபலமான கேடியையும் அவனது கூட்டாளியையும் காவல்துறை கைதுசெய்தது’
  ‘ஒரு சர்வாதிகாரிக்கு மற்றொரு சர்வாதிகாரி கூட்டாளி’

 • 2

  கூட்டாகத் தொழிலை நடத்துபவருள் ஒருவர்; பங்குதாரர்.

  ‘ஒரு பெரிய சட்ட நிறுவனத்தில் இவரும் ஒரு கூட்டாளி’
  ‘கூட்டாளிகளிடமிருந்து விலகித் தனியாகத் தொழில் செய்கிறேன்’

 • 3

  பேச்சு வழக்கு நண்பன்.

  ‘கூட்டாளிகளோடு அவன் கும்மாளமடித்துக்கொண்டிருந்தான்’