தமிழ் கூண்டு யின் அர்த்தம்

கூண்டு

பெயர்ச்சொல்

 • 1

  (பறவையையோ விலங்கையோ அடைத்துவைக்க அல்லது ஆடுமாடுகள் மேய்ந்துவிடாமல் மரக் கன்றுகளைப் பாதுகாக்க) கம்பி அல்லது கம்புகள் கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

  ‘புலிக் கூண்டு’
  ‘கூண்டுக் கிளி’
  ‘மரக் கன்றுகளை ஆடுகள் தின்றுவிடாமலிருக்கக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது’

 • 2

  (நீதிமன்றத்தில் குற்றவாளி அல்லது சாட்சி ஏறி நிற்க வேண்டிய) மேடை போன்ற இடம்.