தமிழ் கூண்டோடு கைலாசம் யின் அர்த்தம்

கூண்டோடு கைலாசம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றாக இருக்கும்) அனைவரும் ஒரே நேரத்தில் இறந்துபோகும் நிலை.

  ‘உன்னை நம்பி வண்டியில் ஏறினால் கூண்டோடு கைலாசம் போக வேண்டியதுதான்’
  ‘மலைப் பாதையில் செல்லும் பேருந்து மட்டும் கவிழ்ந்து விழுந்தால் பயணிகள் அனைவரும் கூண்டோடு கைலாசம்தான்’

 • 2

  அனைவருக்கும் ஒரே மாதிரி மோசமான நிலைமை ஏற்படுதல்.

  ‘நீ செய்யும் தவறுகளுக்கு நாங்களும் உடந்தை என்பது மேலதிகாரிக்குத் தெரிந்தால் கூண்டோடு கைலாசம்தான்’