தமிழ் கூத்து யின் அர்த்தம்

கூத்து

பெயர்ச்சொல்

 • 1

  வசனம், பாட்டு, அடவுகள் போன்றவற்றைக் கொண்டு (பெரும்பாலும் புராணக் கதைகளை) நடிக்கும் நாட்டார் கலை.

  ‘தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாரதக் கதை கூத்தாக ஆடப்படுகிறது’

 • 2

  உயர் வழக்கு நாடகம்.

  ‘இயல், இசை, கூத்து என்ற மூன்று பிரிவுகளில் கூத்துத் தமிழ் நூல்கள் நமக்குக் கிட்டவில்லை’

 • 3

  தேவை இல்லாமல் செய்யும் ஆர்ப்பாட்டம்.

  ‘குடிகாரர்கள் அடிக்கிற கூத்தில் தெருவில் நடக்க முடியவில்லை’
  ‘நாயைக் காணவில்லை என்று நேற்று வீட்டில் ஒரே கூத்து’

 • 4

  (அதிருப்தி, வியப்பு ஆகியவற்றைத் தெரிவிக்கும் சூழலில்) ஒழுங்கில்லாத முறை.

  ‘இது என்ன கூத்து! நேற்று எல்லாவற்றுக்கும் ஒப்புக்கொண்டுவிட்டு இப்போது ‘முடியாது’ என்கிறாய்’