தமிழ் கூப்பிடு யின் அர்த்தம்

கூப்பிடு

வினைச்சொல்கூப்பிட, கூப்பிட்டு

 • 1

  ஒருவருடைய கவனத்தைத் தன்னை நோக்கித் திருப்பும் முறையில் அல்லது அவரைத் தன்னை நோக்கி வருமாறு (பெயரை, உறவு முறை, அடையாளம் போன்றவற்றை) அவர் கேட்கும்படி சொல்லுதல்; அழைத்தல்.

  ‘தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பையனைக் கூப்பிட்டு முருகன் கோயில் எங்கிருக்கிறது என்று விசாரித்தார்’
  ‘‘இங்கே வா’ என்று அவர் சிறுவனைக் கூப்பிட்டார்’
  ‘நீங்கள் என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடலாம்’
  ‘நீ கூப்பிட்டதும் நான் வந்து நிற்க வேண்டுமா?’
  ‘‘ஏய், பச்சை சட்டை; இங்கே வா’ என்று அவர் என்னைக் கூப்பிட்டார்’

 • 2

  (உதவிக்கோ ஒரு நிகழ்ச்சிக்கோ) வரும்படி வேண்டுதல்.

  ‘அவரே நேரில் வந்து என்னைக் கூப்பிட்டதால் போகிறேன்’

 • 3

  (தொலைபேசியின் மூலம்) தொடர்பு கொள்ளுதல்.

  ‘சரியாகப் பத்து மணிக்குத் தொலைபேசியில் என்னைக் கூப்பிடுவதாக நண்பர் சொல்லியிருந்தார்’

 • 4

  அருகிவரும் வழக்கு (விடியற்காலையில் கோழி) கூவுதல்.

  ‘இன்னும் கோழி கூப்பிடவில்லை’