தமிழ் கூப்பு யின் அர்த்தம்

கூப்பு

வினைச்சொல்கூப்ப, கூப்பி

 • 1

  (வணங்கும்போது) உள்ளங்கை ஒன்றோடு ஒன்று தொடும்படி (கைகளை) மார்புக்கு நேராக இணைத்தல்.

  ‘கை கூப்பி வணங்கினார்’
  ‘கூப்பிய கரங்களுடன் வேட்பாளர் மேடையில் நின்றிருந்தார்’
  ‘கைகளைக் கூப்பியபடி வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றார்’

தமிழ் கூப்பு யின் அர்த்தம்

கூப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (வனத் துறை) குத்தகைக்கு விடும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்களின் தொகுப்பு.

  ‘இந்த ஆண்டும் மூங்கில் கூப்புகள் காகித ஆலைக்கே வழங்கப்படும்’