தமிழ் கூம்பு யின் அர்த்தம்

கூம்பு

வினைச்சொல்கூம்ப, கூம்பி

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (மலரின் இதழ்கள்) ஒன்றாக இணைதல்; குவிதல்.

  ‘காலையில் மலரும் தாமரை சூரியன் மறைந்ததும் கூம்பிவிடும்’
  ‘கூம்பிய மல்லிகை மொட்டு’
  உரு வழக்கு ‘உண்மை தெரிந்ததும் அவள் முகம் வாடிக் கூம்பிவிட்டது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு உயர் வழக்கு (மலர், இலை போன்றவை) வாடிவிடுதல்.

தமிழ் கூம்பு யின் அர்த்தம்

கூம்பு

பெயர்ச்சொல்

 • 1

  அடிப்பக்கத்தில் வட்டமாகவும் மேல்பக்கத்தில் கூராகவும் உள்ள வடிவம்.

  ‘கடைக்காரர் தாளைக் கூம்பாக்கிச் சர்க்கரையைக் கொட்டிக் கட்டிக்கொடுத்தார்’
  ‘பம்பரத்தின் அடிப்பகுதி கூம்பு வடிவில் இருக்கும்’