தமிழ் கூர் யின் அர்த்தம்

கூர்

வினைச்சொல்கூர, கூர்ந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பெரும்பாலும் இறந்தகால வடிவங்கள் மட்டும்) (அன்பு, அருள், கருணை போன்ற உணர்வுகளைப் பிறர்மேல்) காட்டுதல்; செலுத்துதல்; கொள்ளுதல்.

  ‘என்மேல் அன்பு கூர்ந்து இதை முடித்துத்தர வேண்டும்’
  ‘தேவன் நம் மீது கருணை கூர்ந்தார்’

தமிழ் கூர் யின் அர்த்தம்

கூர்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஊசி, கத்தி போன்றவற்றில்) குத்தும் அல்லது வெட்டும் முனை.

  ‘கூர் உடைந்த ஊசி’
  ‘கூர் மழுங்கிய கத்தி’

 • 2

  (பென்சிலின்) எழுதும் முனை.

  ‘பென்சிலின் கூர் உடைந்துவிட்டது’

 • 3

  கூர்மை.

  ‘மாட்டின் கொம்பைக் கூராகச் சீவிக் குப்பி பொருத்துவார்கள்’
  ‘பென்சிலின் கூரான முனை’