தமிழ் கூர்மை யின் அர்த்தம்

கூர்மை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (கத்தி, அரிவாள் முதலியவற்றின் ஓரப் பகுதியின்) வெட்டும் பதம்; (ஊசி, ஆணி முதலியவற்றின் முனையின்) கிழிக்கும் அல்லது குத்தும் தன்மை.

  ‘ரம்பத்தின் பற்களை அவ்வப்போது கூர்மையாக்கிக்கொள்ள வேண்டும்’
  ‘மாட்டின் கொம்பு கூர்மையாக இருந்தது’
  ‘புலியின் கூர்மையான நகங்கள்’
  ‘கம்பியின் ஒரு முனை தடித்தும் மறு முனை கூர்மையாகவும் இருந்தது’

 • 2

  (பார்த்தல், கேட்டல் முதலியவை குறித்து வரும்போது) நுட்பமானதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் அல்லது கிரகித்துக்கொள்ளும் தன்மை.

  ‘கூர்மையான பார்வை’
  ‘காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு கேட்டான்’
  ‘அவர் அறிவுக் கூர்மை உள்ளவர்’
  ‘புத்திக் கூர்மை’
  ‘திரைப்படத்தைக் கூர்மையாகக் கவனித்தால் மட்டுமே அந்தக் காட்சி உங்களுக்குப் புரியும்’