வினைச்சொல்
- 1
(பேச்சு அல்லது எழுத்து மூலமாக) (பிறர்) அறியச் செய்தல்; சொல்லுதல்.
‘‘நீங்கள் போகலாம்’ என்று கூறிவிட்டு அவர் வேலையில் ஈடுபட்டார்’‘திட்டக்குழுவின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது’
பெயர்ச்சொல்
- 1
அம்சம்.
‘யட்சகானத்துக்கும் தெருக்கூத்துக்கும் இடையே பொதுவான கூறுகள் இருக்கின்றன’‘மொழியின் அடிப்படைக் கூறு ‘சொல்’ ஆகும்’‘இவற்றை மாநாட்டின் சிறப்புக் கூறுகளாகச் சொல்லலாம்’‘பல நவீனக் கூறுகளை உள்ளடக்கிய நாடகம்’ - 2
(காய்கறி, தின்பண்டம் போன்றவற்றில் சம பங்கு இருக்கும்படி) கண்திட்டமாகவோ குறிப்பிட்ட அளவிலோ பிரித்துவைக்கப்பட்ட குவியல்.
‘கத்திரிக்காய்க் கூறு ஒவ்வொன்றின் விலையும் இரண்டு ரூபாய்தான்’‘பிடித்து வந்த மீன்களை ஐந்து கூறாக்கி ஆளுக்கு ஒரு கூறு எடுத்துக்கொண்டார்கள்’