தமிழ் கூலி யின் அர்த்தம்

கூலி

பெயர்ச்சொல்

 • 1

  (விவசாய வேலைகளுக்காகத் தரும்) தானியம் அல்லது பணம்; (கட்டடப் பணியில் அமர்த்தப்படுபவருக்கு) நாள் அல்லது வார அடிப்படையில் தரும் பணம்; (தொழிலாளி செய்து முடித்த) வேலைக்கான பணம்.

  ‘நாற்று நட்டதற்குக் கூலி இரண்டு மரக்கால் நெல்’
  ‘கட்டட வேலையில் உனக்கு வாரக் கூலியா, தினக் கூலியா?’
  ‘சட்டைக்குத் தையல் கூலி நூறு ரூபாய்’
  ‘நான் உங்களிடம் சன்மானம் கேட்கவில்லை; உழைத்ததற்கான கூலியைத்தான் கேட்கிறேன்’
  ‘கூலிக்கு ஆட்களை அழைத்துவந்து கட்சிக் கூட்டம் நடத்த வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை’

 • 2

  பேச்சு வழக்கு (பெரும்பாலும்) வாகனத்தைப் பயன்படுத்தியதற்குத் தர வேண்டிய பணம்.

  ‘வண்டிக் கூலி’
  ‘ரிக்ஷாக்காரனுக்குக் கூலி கொடுத்து அனுப்பு!’

 • 3

  பயிர்த் தொழில், கட்டட வேலை, சுமை தூக்குதல் முதலிய வேலை செய்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு பிழைப்பு நடத்துபவர்.

  ‘நகரத்தில் கூலிகளாக வேலை செய்வதற்குக் கிராமங்களிலிருந்து ஆட்களை வரவழைக்கிறார்கள்’