தமிழ் கூலிப்படை யின் அர்த்தம்

கூலிப்படை

பெயர்ச்சொல்

  • 1

    (போர்செய்தல், கலகம், கிளர்ச்சி போன்றவற்றை உண்டாக்குதல் போன்ற செயல்களுக்காக) பணம் கொடுத்துத் தற்காலிகமாக அமர்த்தப்படும் படை.

    ‘அந்நியக் கூலிப்படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் பத்து பேர் காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்’

  • 2

    பணம் பெற்றுக்கொண்டு வன்முறையில் ஈடுபடும் நபர்கள்.

    ‘அரசியல்வாதியைக் கொலை செய்த கூலிப்படையினரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’