தமிழ் கூழைக்கும்பிடு யின் அர்த்தம்

கூழைக்கும்பிடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரிடம் காரியம் சாதித்துக்கொள்வதற்காகக் காட்டும்) போலியான மரியாதை.

    ‘முதலாளிக்குக் கூழைக்கும்பிடு போட்டே அவன் மகனுக்கு வேலை வாங்கிவிட்டான்’
    ‘இந்தக் கூழைக்கும்பிடு எல்லாம் வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் என்று சொல்’
    ‘கடன் கேட்கும்போது மட்டும் கூழைக்கும்பிடு போடுவான்’