தமிழ் கூவு யின் அர்த்தம்

கூவு

வினைச்சொல்கூவ, கூவி

 • 1

  (குயில், கோழி முதலிய சில பறவைகள்) ஒலி எழுப்புதல்.

  ‘முதல் கோழி கூவியதும் கிழவர் விழித்துக்கொண்டார்’
  ‘‘குயில் கத்தும்’ என்று மாணவன் சொல்லியதை ‘குயில் கூவும்’ என்று ஆசிரியர் திருத்தினார்’

 • 2

  உரத்த குரலில் (ஒன்றைச் சொல்லி) சத்தமிடுதல்.

  ‘‘மீனோ மீன்’ என்று கூவிக்கொண்டே போனாள்’
  ‘‘என்ன அற்புதமான காட்சி!’ என்று அவர் கூவினார்’