தமிழ் கெட்ட யின் அர்த்தம்

கெட்ட

பெயரடை

 • 1

  தீமை விளைவிக்கிற; தீய; தவறான.

  ‘போதைப்பொருள்களைப் பயன்படுத்தும் கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகிவிடாதே!’
  ‘கெட்ட சகுனம், நல்ல சகுனம் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்காதே!’
  ‘என்ன கெட்ட நேரமோ, அவன் இப்படித் தவறாக நடந்துகொண்டுவிட்டான்’

 • 2

  (நடத்தையைக் குறிக்கும்போது) ஒழுக்கம் இல்லாத.

  ‘கெட்ட சகவாசம்தான் அவனது இந்த நிலைக்குக் காரணம்’
  ‘கெட்ட பையன்’

 • 3

  (நாற்றத்தைக் குறிக்கும்போது) அருவருப்பை ஏற்படுத்தும்; மோசமான.

  ‘இந்தக் கெட்ட நாற்றம் எங்கிருந்து வருகிறது?’