தமிழ் கெட்டி யின் அர்த்தம்

கெட்டி

வினைச்சொல்கெட்டிக்க, கெட்டித்து

 • 1

  (திணித்து) நெருக்கமாக அடைத்தல்.

  ‘வெடிமருந்து கெட்டித்தபோது நடந்த விபத்தா?’

தமிழ் கெட்டி யின் அர்த்தம்

கெட்டி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (துணி, காகிதம் முதலியவற்றின்) கனம்; திண்மை.

  ‘அழைப்பிதழைக் கெட்டியான தாளில் அச்சடிக்க வேண்டும்’
  ‘துணி கெட்டியாக இருக்கிறது’

 • 2

  (தயிர், பிசைந்த மாவு போன்றவை) நீர்த் தன்மை குறைவாகவும் சற்று நெகிழ்வாகவும் உள்ள நிலை.

  ‘கெட்டித் தயிர்’
  ‘மாவைக் கெட்டியாகப் பிசைந்து வை!’
  ‘கெட்டிச் சட்னி’

 • 3

  (ஆயுளைக் குறிப்பிடும்போது) நீடித்த தன்மை உடையது.

  ‘இவருக்கு ஆயுள் கெட்டி; விபத்தில் இவர் மட்டும்தான் உயிர் தப்பினார்’
  ‘இறந்துவிடுவார் என்றே நினைத்தோம். ஆனால் அவருக்கு ஆயுள் கெட்டி’

தமிழ் கெட்டி யின் அர்த்தம்

கெட்டி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (வாய்ப்பில்) குறியாக இருக்கும் நபர்; திறமைசாலி.

  ‘வளவளவென்று பேசினாலும் அவள் காரியத்தில் கெட்டி’
  ‘கணவனும் மனைவியும் காசு விஷயத்தில் கெட்டி’
  ‘பையன் படிப்பில் கெட்டி’