தமிழ் கெட்டிப்படு யின் அர்த்தம்

கெட்டிப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (திரவ நிலையில் உள்ள பொருள்) இறுகித் திடப் பொருளாக ஆதல்.

    ‘பாகு சற்றுக் கெட்டிப்பட்டதும் தேங்காயைப் போட்டுக் கிளற வேண்டும்’
    ‘சிமிண்டு போட்ட தளம் இன்னும் கெட்டிப்படவில்லை’