கெடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கெடு1கெடு2கெடு3

கெடு1

வினைச்சொல்கெட, கெட்டு, கெடுக்க, கெடுத்து

 • 1

  (ஒன்று அல்லது ஒருவர்) மோசமான நிலையை அல்லது தன்மையை அடைதல்; (இருந்த நிலை, தன்மை) பாதிப்படைதல்; சீர்குலைதல்.

  ‘ஒலிபெருக்கியின் அலறலால் தூக்கம் கெடுகிறது’
  ‘சேரக் கூடாதவர்களுடன் சேர்ந்துதான் தன் மகன் கெட்டுவிட்டான் என்று அவர் புலம்பினார்’

 • 2

  (உணவுப்பொருள் போன்றவை நுண்கிருமிகளால் பாதிக்கப்பட்டு அல்லது பதம் அழிந்து) உண்பதற்கு ஏற்றதாக இல்லாமல் போதல்; (காற்று, நீர் போன்றவை) இயல்பான தன்மையை இழத்தல்.

  ‘குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பால் கெடாது’
  ‘பழக் கூடை கீழே விழுந்ததால் பழங்கள் நசுங்கிக் கெட்டுப்போய்விட்டன’
  ‘மழையில் நனைந்து வைக்கோல் கெட்டுவிட்டது’
  ‘நச்சுப் புகையால் காற்றின் தூய்மை கெடுகிறது’

 • 3

  (நற்பெயர், மரியாதை முதலியவை) பாதிப்படைதல்; (அறிவு, உணர்ச்சி போன்றவை) பாதிப்படைதல்; குறைதல்.

  ‘இதைச் செய்தால் என் பெயர் கெட்டுவிடும்’
  ‘சுரணை கெட்டு அலைகிறேன் என்று நினைத்துவிட்டாயா?’
  ‘உனக்குப் புத்தி கெட்டுவிட்டதா, என்ன? குழந்தையைப் போட்டு இப்படி அடிக்கிறாயே?’

 • 4

  (உடல் உறுப்பு, இரத்தம் முதலியவற்றைக் குறித்து வரும்போது செயல்திறன் இழந்து) பாதிப்பு ஏற்படுதல்; (இயந்திரம்) பழுதடைதல்.

  ‘சாப்பாடு சரியில்லை என்று சொல்லாதே. உனக்குதான் நாக்குக் கெட்டுவிட்டது’
  ‘சிறுநீரகம் கெட்டுப்போனால் இரத்தமும் கெட்டுப்போகும்’
  ‘கண்டதையெல்லாம் சாப்பிட்டு வயிறு கெட்டுவிட்டது’
  ‘காப்பிக்கொட்டை அரைக்கும் இயந்திரம் அதற்குள் கெட்டுவிட்டது’

 • 5

  (கெட்டான், கெட்டாள், கெட்டது போன்ற வினைமுற்று வடிவங்களில் மட்டும்) சிறந்த உதாரணத்தையும் ஒருவர் மிஞ்சிவிட்டார் அல்லது ஒன்று மிஞ்சிவிட்டது என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘உன் திருடன் வேஷம் பிரமாதம்; அசல் திருடன் கெட்டான்’
  ‘பலே தந்திரசாலி நீ; சாணக்கியன் கெட்டான் போ!’

கெடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கெடு1கெடு2கெடு3

கெடு2

வினைச்சொல்கெட, கெட்டு, கெடுக்க, கெடுத்து

 • 1

  மோசமான நிலையை அடையச் செய்தல்; சீர்குலையும்படி செய்தல்.

  ‘ஒரு சிறு தகராறு குடும்ப வாழ்க்கையின் நிம்மதியைக் கெடுத்துவிட்டது’
  ‘குதிரைப் பந்தயம் பலருடைய வாழ்க்கையைக் கெடுத்திருக்கிறது’

 • 2

  (காற்று, நீர் போன்றவற்றின்) இயல்பான தன்மையை இழக்கச் செய்தல்.

  ‘சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நிலைகளின் தூய்மையைக் கெடுக்கின்றன’

 • 3

  (உணர்ச்சியை) குலைத்தல்; (நற்பெயர் முதலியவற்றை) பாதித்தல்.

  ‘உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை’
  ‘உட்பூசல்கள் கட்சியின் பெயரைக் கெடுக்கின்றன’

 • 4

  (உடல் உறுப்பை அல்லது அதன் செயல்திறனை) பாதித்தல்; (இயந்திரத்தை) பழுதாக்குதல்.

  ‘கண்டதையெல்லாம் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்ளாதே!’
  ‘ஓட்டத் தெரியாமல் ஓட்டிக் காரைக் கெடுத்துவிடாதே’

 • 5

  (தீய வழியில் ஈடுபடச் செய்து) பாழாக்குதல்.

  ‘ஒரு கிரேக்கத் தத்துவஞானி இளைஞர்களைக் கெடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார்’
  ‘நன்றாகப் படிக்கும் பையனையும் கெடுத்துவிடாதே’

 • 6

  (பெண்ணைக் குறிப்பிடும்போது) கற்பழித்தல்.

  ‘அந்தக் கலவரத்தின்போது பல பெண்கள் கெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது’

கெடு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கெடு1கெடு2கெடு3

கெடு3

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு காரியத்தை முடிக்கத் தரப்படும்) கால வரம்பு; (நிர்ணயிக்கப்பட்ட) கால எல்லை.

  ‘வங்கியில் கடனைச் செலுத்த வேண்டிய கெடு நேற்றுடன் முடிவடைந்தது’
  ‘பயங்கரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவும் சரணடையவும் ராணுவம் கெடு நிர்ணயித்துள்ளது’