தமிழ் கெடுபிடி யின் அர்த்தம்

கெடுபிடி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (விதிமுறைகள், கட்டளைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதில் காட்டும்) கடுமை; கண்டிப்பு.

  ‘வரி வசூலிப்பில் அதிகாரிகள் கெடுபிடியாக நடந்துகொண்டனர்’
  ‘சுங்கத் துறையினரின் கெடுபிடியான நடவடிக்கைகளினால் கடத்தல் கணிசமாகக் குறைந்துவிட்டது’

 • 2

  சுதந்திரமாகச் செயல்பட முடியாத கட்டுப்பாடு.

  ‘வீட்டில் அப்பாவின் கெடுபிடிகள் அதிகம்’
  ‘வீட்டுக்காரரின் கெடுபிடி தாங்க முடியவில்லை’