தமிழ் கொசுறு யின் அர்த்தம்

கொசுறு

பெயர்ச்சொல்

  • 1

    காய்கறி, தின்பண்டம் போன்றவற்றை வாங்கும்போது அதே பொருளில் இனாமாகக் கிடைக்கும் சிறு அளவு.

    ‘பச்சைமிளகாயை நிறுத்துப் போட்டுவிட்டுக் கொசுறாக இரண்டு மிளகாயையும் கடைக்காரர் போட்டார்’

  • 2

    பேச்சு வழக்கு (வேலை முதலியவற்றைக் குறித்து வரும்போது) சிறிய அளவில் எஞ்சியிருப்பது.

    ‘முக்கியமானதை முடித்துவிட்டேன்; கொசுறு வேலைதான் இருக்கிறது’