தமிழ் கொசுவு யின் அர்த்தம்

கொசுவு

வினைச்சொல்கொசுவ, கொசுவி

  • 1

    (புடவையைக் கட்டும்போது) கைவிரல்களால் மடிப்பு உண்டாக்கிச் சுருக்குதல்.

    ‘எனக்குப் புடவை கட்டிப் பழக்கம் இல்லை. எப்படிக் கொசுவ வேண்டும் என்று சொல்லித்தாருங்கள்’
    ‘நைலான் புடவை என்பதால் கொசுவிக் கட்டிக்கொள்வதற்குக் கடினமாக இருந்தது’