தமிழ் கொஞ்சம் யின் அர்த்தம்

கொஞ்சம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  சிறிதளவு.

  ‘சாம்பாரில் உப்பு கொஞ்சம் அதிகம்’
  ‘உனக்குக் கொஞ்சம்கூடப் புத்தியில்லையா?’
  ‘கொஞ்ச நேரம் காத்திரு; அவர் வந்துவிடுவார்’
  ‘பாலில் சர்க்கரை கொஞ்சமாகப் போட்டுக்கொண்டுவா’

தமிழ் கொஞ்சம் யின் அர்த்தம்

கொஞ்சம்

வினையடை

 • 1

  சிறிது; சற்று.

  ‘இந்த விஷயத்தை அவரிடம் சொன்னால் கொஞ்சம் கோபப்படுவார்’
  ‘கூட ஓர் அறை கட்டக் கொஞ்சம் செலவாகும்’

 • 2

  பேச்சு வழக்கு (வேண்டிக்கொள்ளும்போது அல்லது அனுமதி கேட்கும்போது) செய்யும் செயலுக்குச் சற்று ஒத்துழைப்பு தேவை என்னும் முறையில் பயன்படுத்தப்படும் சொல்; தயவுசெய்து.

  ‘இங்கே கொஞ்சம் வாருங்கள்’
  ‘நான் பரீட்சைக்குப் படிக்க வேண்டும். கொஞ்சம் பேசாமல் இருக்கிறீர்களா?’

தமிழ் கொஞ்சம் யின் அர்த்தம்

கொஞ்சம்

இடைச்சொல்

 • 1

  (குறிப்பிடப்படும்) தன்மையை மிகுவிக்கவோ அல்லது குறைக்கவோ பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடினால்தான் பேருந்தைப் பிடிக்க முடியும்’
  ‘கொஞ்சம் சத்தமாகப் பேசினால்தான் தாத்தாவின் காதில்விழும்’
  ‘கொஞ்சம் பெரிய வீடாக இருந்தால் நல்லது’
  ‘காப்பியில் சர்க்கரையைக் கொஞ்சம் குறைத்துப் போடு’