கொஞ்சு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொஞ்சு1கொஞ்சு2

கொஞ்சு1

வினைச்சொல்கொஞ்ச, கொஞ்சி

 • 1

  ஆசைப்படவைக்கும் முறையில் குழைந்து பேசுதல் அல்லது நடத்தல்.

  ‘குழந்தையைத் தூக்கிவைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தான்’
  ‘குழந்தை ‘அப்பா, அப்பா’ என்று அவன் காலைக் கட்டிக்கொண்டு கொஞ்சியது’
  உரு வழக்கு ‘அவரிடத்தில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது’

 • 2

  (அழகு, கனிவு முதலியவை) நிறைந்து காணப்படுதல்.

  ‘எழில் கொஞ்சும் பூஞ்சோலை’
  ‘கருணையும் கனிவும் கொஞ்சும் முகம்’

கொஞ்சு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொஞ்சு1கொஞ்சு2

கொஞ்சு2

வினைச்சொல்கொஞ்ச, கொஞ்சி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு முத்தமிடுதல்.

  ‘அண்ணன் மகளைத் தூக்கிக் கொஞ்சினான்’
  ‘கனநாளைக்குப் பின் ஊர் வந்தபோது அம்மா பேரனைக் கட்டிப்பிடித்துக் கொஞ்சினாள்’