தமிழ் கொட்டம் யின் அர்த்தம்

கொட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (மற்றவர்களின் அமைதியைக் குலைக்கும்) ஆரவாரம் மிகுந்த விளையாட்டு.

  ‘அப்பா இல்லையென்றால் வீட்டில் குழந்தைகளின் கொட்டம் தாங்க முடியாது’

 • 2

  (கவலைப்படவைக்கும்) அடாவடித்தனம்; அட்டகாசம்.

  ‘பேட்டையில் ரௌடிகளின் கொட்டம் அதிகரித்துவிட்டது’
  ‘புதிய இயக்குநரின் கொட்டம் தாங்க முடியவில்லை’