தமிழ் கொட்டிக்கொள் யின் அர்த்தம்

கொட்டிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (வெறுப்புடன் கூறும்போது) (அனுபவித்துச் சாப்பிடுதல் என்ற முறையில் அல்லாமல்) வயிற்றை நிரப்பிக்கொள்ளுதல்.

    ‘வேலைக்குப் போகமாட்டாய்; வேளாவேளைக்கு வந்து வயிற்றுக்குக் கொட்டிக்கொள்கிறாய்’
    ‘வேகவேகமாகக் கிடைத்ததைக் கொட்டிக்கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பினேன்’