கொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொட்டு1கொட்டு2கொட்டு3கொட்டு4கொட்டு5

கொட்டு1

வினைச்சொல்கொட்ட, கொட்டி

 • 1

  (கீழ் நோக்கி விழுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (ஓர் இடத்திலிருந்து திரவம்) வழிதல் அல்லது விசையுடன் கீழே விழுதல்

   ‘தொட்டி நிரம்பித் தண்ணீர் கொட்டத் துவங்கியது’
   ‘அடிபட்ட காலிலிருந்து இரத்தம் கொட்டியது’
   உரு வழக்கு ‘துணி வியாபாரத்தில் அவருக்குப் பணம் கொட்டுகிறது’

  2. 1.2 (திரவத்தை) ஊற்றுதல்

   ‘தண்ணீரை இறைத்துத் தொட்டியில் கொட்டு!’
   ‘கெட்டுப்போன பாலைக் கொட்டிவிட்டுப் பாத்திரத்தைத் தேய்த்தாள்’
   உரு வழக்கு ‘குழந்தைமேல் அன்பைக் கொட்டி வளர்த்தாள்’

  3. 1.3 (மணல், ஜல்லி போன்றவற்றை ஓர் இடத்தில் கொண்டுவந்து) குவித்தல்

   ‘வீட்டின் முன்னால் கொட்டிக்கிடக்கும் மணலில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்’
   உரு வழக்கு ‘இந்த வியாபாரத்தில் ஏன் இப்படிப் பணத்தைக் கொட்டுகிறாய்?’

  4. 1.4 (மழை, பனி போன்றவை) மிகுதியாகப் பெய்தல்

   ‘நேற்று ஒரு மணி நேரம் மழை கொட்டியது’
   ‘கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டத்துக்கு வந்திருந்தனர்’

  5. 1.5 (தலைமுடி அதிகமாக) விழுதல்; உதிர்தல்

   ‘ஒரு மாதக் காய்ச்சலில் முடியெல்லாம் கொட்டிவிட்டது’

 • 2

  (ஒன்றின் மேல் படுதல், தட்டுதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 (கண்) இமைத்தல்

   ‘குழந்தை கண்ணைக் கொட்டிக்கொட்டிப் பார்த்தது’
   ‘தெருவில் வந்த யானையை இமை கொட்டாமல் குழந்தைகள் பார்த்தன’

  2. 2.2 (தாளக் கருவியைக் கையால் அல்லது குச்சியால்) அடித்தல்; தட்டுதல்

   ‘அவன் போட்ட சத்தம் மேளம் கொட்டும் சத்தத்தையும் மீறிக் கேட்டது’
   ‘பறை கொட்டும் ஒலி கேட்கிறது’

  3. 2.3 (கைகளை) தட்டுதல்

   ‘குழந்தை கை கொட்டிச் சிரித்தது’

  4. 2.4 (தேள், தேனீ, வண்டு போன்ற பிராணிகள்) கொடுக்கால் குத்துதல்

   ‘முகத்தில் தேனீ கொட்டிய இடம் வீங்கிவிட்டது’

 • 3

  (மரபு வழக்கு)

  1. 3.1 (பல்லி) சத்தமிடுதல்

   ‘அறையில் எங்கோ ஒரு பல்லி கொட்டும் சப்தம் கேட்டது’

கொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொட்டு1கொட்டு2கொட்டு3கொட்டு4கொட்டு5

கொட்டு2

துணை வினைகொட்ட, கொட்டி

 • 1

  ஒரு செயலின் தீவிரத்தை உணர்த்தும் துணை வினை.

  ‘வீட்டுக்குள் இருக்க முடியாதபடி வியர்த்துக்கொட்டுகிறது’
  ‘உங்களுக்குச் சமைத்துக்கொட்ட நான்தான் கிடைத்தேனா?’
  ‘சம்பாதித்துக்கொட்ட நான் இருக்கும்போது உங்களுக்கெல்லாம் என்ன கவலை?’

கொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொட்டு1கொட்டு2கொட்டு3கொட்டு4கொட்டு5

கொட்டு3

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு பக்கத்தில் மட்டும் தட்டி வாசிக்கக்கூடிய ஒரு வகைத் தோல் கருவி.

கொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொட்டு1கொட்டு2கொட்டு3கொட்டு4கொட்டு5

கொட்டு4

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கிணற்றுக்கட்டு.

  ‘கிணற்றுக் கொட்டில் இருந்த சவுக்காரம் கிணற்றினுள் விழுந்துவிட்டது’

கொட்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொட்டு1கொட்டு2கொட்டு3கொட்டு4கொட்டு5

கொட்டு5

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு குறுக்குவாக்கில் வெட்டிய மரத் துண்டு.

  ‘பனங்கொட்டு’
  ‘தென்னங்கொட்டு’