தமிழ் கொட்டுவாய் யின் அர்த்தம்

கொட்டுவாய்

பெயர்ச்சொல்

 • 1

  (தேள், குளவி முதலிய விஷப் பூச்சிகள்) கொட்டிய இடம்; கடிவாய்.

  ‘கொட்டுவாயில் மருந்து போடு!’
  ‘கொட்டுவாயில் சரியான வலி’

 • 2

  பேச்சு வழக்கு மிகவும் அவசரமான அல்லது தீவிரமான நிலை.

  ‘‘உங்களுக்குக் கொட்டுவாயில்தான் என்னுடைய ஞாபகம் வரும்’ என்று சொல்லி விட்டு மாமா என்னிடம் பணத்தைத் தந்தார்’