தமிழ் கொட்டை யின் அர்த்தம்

கொட்டை

பெயர்ச்சொல்

 • 1

  பழம், காய் முதலியவற்றில் இருக்கும் (பெரும்பாலும்) தடித்த கனமான ஓட்டினை உடைய உருண்டை வடிவ விதை.

  ‘வேப்பங்கொட்டை’
  ‘பலாக் கொட்டை’
  ‘மாங்கொட்டை’

 • 2

  (சிவ பக்தர்கள் அணியும்) உத்திராட்சம்.

  ‘கழுத்தில் கொட்டையுடன் எதிரே ஒரு பண்டாரம் வந்தார்’

 • 3

  (எழுத்துகளின் வடிவத்தைக் குறிப்பிடும்போது) பெரிய உருண்டை வடிவம்.

  ‘கொட்டை எழுத்துகளில் ஒரு பெயர்ப் பலகை’
  ‘அவன் கையெழுத்து கொட்டைகொட்டையாக இருக்கும்’

 • 4

  பேச்சு வழக்கு விரை.