தமிழ் கொடிகட்டி யின் அர்த்தம்

கொடிகட்டி

வினையடை

  • 1

    (செல்வாக்கு, புகழ் போன்றவை) மிகச் சிறப்பாக வெளிப்படும் வகையில்.

    ‘ஒரு காலத்தில் கொடிகட்டி வாழ்ந்த குடும்பம் இது’
    ‘இப்போது கொடிகட்டிப் பறக்கும் நடிகர் இவர்’
    ‘இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் உலகம் முழுதும் கொடிகட்டி ஆண்டார்கள்’