தமிழ் கொடிய யின் அர்த்தம்

கொடிய

பெயரடை

 • 1

  உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய.

  ‘பூகம்பம் ஏற்பட்ட பகுதியில் கொடிய நோய் பரவும் அபாயம் உள்ளது’
  ‘கொடிய விஷம் உள்ள நாகம்’

 • 2

  பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு வருத்தும்; கடுமையான; மிகுந்த.

  ‘கொடிய குளிர் காற்று வீசுகிறது’
  ‘கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது’
  ‘விசாரணைக் கைதிகளைக் கொடிய முறையில் நடத்துவதாக அந்தக் காவல்துறை அதிகாரி மீது புகார் வந்துள்ளது’