கொடியேற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொடியேற்று1கொடியேற்று2

கொடியேற்று1

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

  • 1

    கோயில், தேவாலயம், மசூதி ஆகியவற்றில் திருவிழாவின் தொடக்கமாக நடக்கும் சடங்கில் கொடியைக் கம்பத்தில் பறக்கவிடுதல்/பொது நிகழ்ச்சியில் தேசியக் கொடி, கட்சிக் கொடி போன்றவற்றைக் கம்பத்தில் பறக்கவிடுதல்.

கொடியேற்று -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொடியேற்று1கொடியேற்று2

கொடியேற்று2

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பட்டத்தைப் பறக்கவிடுதல்.

    ‘ஒவ்வொரு தைப் பொங்கலுக்கும் கொடியேற்றும் போட்டி நடக்கும்’
    ‘நீ என்ன கொடியேற்றினாய்?’