தமிழ் கொடி பிடி யின் அர்த்தம்

கொடி பிடி

வினைச்சொல்பிடிக்க, பிடித்து

  • 1

    (ஒன்றை எதிர்த்து) போராட்டம் நடத்துதல்.

    ‘புதிதாக விதிக்கப்பட்ட விற்பனை வரியை எதிர்த்து வியாபாரிகள் கொடி பிடித்துள்ளனர்’
    ‘கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் கொடி பிடிக்கின்றனர்’