தமிழ் கொடுமை யின் அர்த்தம்

கொடுமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  ஒன்றின் விளைவாக உணரும் கடுமை அல்லது அனுபவிக்கும் துன்பம்.

  ‘உலகத்தில் ஏழையாக இருப்பது கொடுமை’
  ‘கொடுமையான வெயில்’

 • 2

  மிகுந்த துன்பம் தரும் செயல்; இரக்கமற்ற செய்கை.

  ‘நீ செய்த கொடுமைகளுக்கு இப்போது தண்டனை அனுபவிக்கிறாய்’
  ‘சிறையின் சிறிய அறையில் முப்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். என்ன கொடுமை!’