தமிழ் கொண்டுவா யின் அர்த்தம்

கொண்டுவா

வினைச்சொல்-வர, -வந்து

 • 1

  (ஒருவரை) அழைத்துவருதல்; (ஒன்றை) எடுத்துவருதல்.

  ‘நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுவர வேண்டும் என்று மருத்துவர் கூறினார்’
  ‘நான் சொன்ன புத்தகங்களைக் கொண்டுவந்தாயா?’

 • 2

  (பிரச்சினை, தீர்மானம் முதலியவற்றை) கவனத்துக்கு உட்படுத்துதல்.

  ‘சின்னச்சின்னப் பிரச்சினைகளையெல்லாம் என்னிடம் கொண்டுவராதீர்கள் என்று மேலதிகாரி கூறிவிட்டார்’
  ‘எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றுப்போயிற்று’

 • 3

  (சட்டத்தை அல்லது சட்டத்தில் திருத்தத்தை) ஏற்படுத்துதல்.

  ‘மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரக் கோரிப் பெண்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது’
  ‘இடஒதுக்கீட்டில் திருத்தம் கொண்டுவர வேண்டிப் போராட்டம் நடத்தப்பட்டது’